Wednesday, November 1, 2017
அரசு ஊழியருக்கு புதிய ஊதிய அறிவிப்பு: நவம்பர் 30 -இல்தான் அமல்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டாலும், ஊதிய உயர்வானது நவம்பர் மாதத்தில் இருந்தே நடைமுறைக்கு வருகிறது. இதனால், உயர்த்தப்பட்ட மாத ஊதியத்தை நவம்பர் 30 -ஆம் தேதிதான் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பெற முடியும். மேலும், அக்டோபர் மாதத்துக்கான நிலுவைத் தொகை, 20 நாள்களில் அளிக்கப்படும் என நிதித் துறை தெரிவித்துள்ளது.
தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த பரிந்துரைகளின்படி, ஒவ்வொரு ஊழியருக்கும் மாத ஊதியமானது உயர்த்தி அளிக்கப்பட்டுள்ளது. இந்த உயர்த்தப்பட்ட ஊதியமானது, அக்டோபர் 30 -ஆம் தேதியே வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில். தமிழக அரசின் நிதித் துறையானது புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
நவம்பர் இறுதியில் முழுமையாக... இந்த உத்தரவுப்படி, புதிய ஊதிய விகிதம், நவம்பர் மாத இறுதியில் இருந்து (நவ.30) நடைமுறைக்கு வரும். ஊதியம் வழங்குவதற்கான மின்னணு சம்பளப் பட்டியலானது, உயர்த்தப்பட்ட ஊதிய விகிதத்துக்கு தகுந்தாற்போன்று திருத்தம் செய்யப்பட வேண்டும். இதற்காக, தேசிய தகவலியல் மையம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் முடிந்ததும், நவம்பர் 30 -இல் உயர்த்தப்பட்ட ஊதியம் அளிக்கப்படும். அக்டோபர் 30 -ஆம் தேதியன்று, பழைய ஊதியமே அளிக்கப்பட்டுள்ளது. இதனால், அக்டோபர் மாதத்துக்கான உயர்த்தப்பட்ட ஊதியமானது நிலுவைத் தொகையாக நவம்பர் 20 -ஆம் தேதிக்குள் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.