Saturday, November 4, 2017
போலி சான்றிதழ்: தலைமை ஆசிரியை 'சஸ்பெண்ட்'.
தஞ்சை அருகே, போலி ஜாதி சான்றிதழ் கொடுத்து, 20 ஆண்டுகளாக பள்ளியில் பணியாற்றிய பெண் தலைமை ஆசிரியை, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை அடுத்த நரியனுார் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், தலைமை ஆசிரியையாக பணியாற்றியவர் கிறிஸ்டினாள் பேபி, 50.
பிற்படுத்தப்பட்டோர் பிரிவைச் சேர்ந்த இவர், பழங்குடியின ஜாதி சான்றிதழ் கொடுத்து, 1997ம் ஆண்டு ஆசிரியர் பணியில் சேர்ந்து, 20 ஆண்டு களாக பணிபுரிந்தது தெரிந்தது.
இதையடுத்து, நேற்று முன்தினம், கிறிஸ்டினாள் பேபியை, கல்வி துறை அதிகாரிகள், சஸ்பெண்ட் செய்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.