WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, November 12, 2017

பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வு மாற்றுத்திறனாளிகள் அதிர்ச்சி.

பாலிடெக்னிக் ஆசிரியர் பணி நியமனத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான ஆணை நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதற்கு, எதிர்ப்பு கிளம்பி உள்ளது.தமிழகத்தில் உள்ள பாலிடெக்னிக்குகளில், 1,058 ஆசிரியர், விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு நடத்தப்பட்டது. அதில், தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. இதில், மாற்றுத்திறனாளிகள் தேர்ச்சி விபரம் மட்டும், நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து, மாற்றுத்திறனாளிகள் நலச் சங்கத்தினர் கூறியதாவது:ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இந்த செயல், மாற்றுத்திறனாளிகள் உரிமைகளுக்கு எதிரானது; பாரபட்சம் காட்டுவதாக உள்ளது. மேலும், தேர்ச்சி பெற்றவர்களுக்கான, சான்றிதழ் சரிபார்க்கும் பணி, நவ., 23 - 25 வரை நடக்க உள்ளதாக, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இது, தேர்ச்சி பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
எனவே, தேர்ச்சி பெற்றுள்ள மாற்றுத்திறனாளிகள் பட்டியலை, உடனடியாக வெளியிட்டு, சான்றிதழ் சரிபார்ப்புக்கு, அவர்களையும் அழைத்து, பணி நியமனம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.