ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாததால், தகுதி காண் பருவம் முடிக்கப்படாமல் உள்ள ஆசிரியர்களுக்கு, புதிய சலுகை வழங்கப்பட்டுள்ளது.தமிழகத்தில், கட்டாய கல்வி சட்டம், 2010 அக்., 23ல் அமல்படுத்தப்பட்டது. இதில், ஆசிரியர் நியமனத்துக்கு, தகுதித் தேர்வு கட்டாயம் என வலியுறுத்தப்பட்டதால், 2011 நவ., 15ல், அதற்கான அரசாணை வெளியிடப்பட்டது.
அதே மாதம், பணி நியமனம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு, ஐந்தாண்டுகளுக்குள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என, நிபந்தனை விதிக்கப்பட்டது.
இதனால், அத்தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர் களுக்கு, பணி வரன்முறை ஆணை வழங்கப்பட்டிருப்பினும், தகுதி காண் பருவம் வழங்கப்படவில்லை.
ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தும் முன், பணி நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு, முழுமையாக தகுதித் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்தது.
இதனால், பணி நியமனம் பெற்றவர்களில், 2010 ஆக., 23க்கு முன், சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றோர், தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற தேவையில்லை என, அறிவிக்கப்பட்டது.
புதிய சலுகையாக, 'பணி நியமனம் பெற்றவர்களில், அதற்கான விளம்பரம், 2010 ஆக., 23க்கு முன் வெளியாகிஇருந்தால், அவர்களும், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற தேவையில்லை' என, அறிவிக்கப்பட்டுள்ளது.இப்பிரிவில் வரும் ஆசிரியர்களின் தகுதிகாண் பருவத்தை முடித்து, ஆணை வழங்க, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், பெரும்பாலான பட்டதாரி ஆசிரியர்கள், பணி நிரந்தரம் செய்வதில் நிலவி வந்த சிக்கல் தீர்ந்துள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.