பள்ளி கலையருவி திருவிழாவில், சினிமா பாடல்கள் கூடாது' என, பள்ளிக் கல்வித்துறை தடை விதித்துள்ளது.
தமிழக பள்ளிகளில்,
கலையருவி திருவிழா போட்டிகள் துவங்கியுள்ளன. பள்ளி அளவில், நேற்று போட்டிகள் நடத்தப்பட்டன. வட்டார அளவிலும், பின், மாவட்ட அளவிலும் போட்டிகள் நடத்தப்படுகின்றன. தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு, மதிப்பெண், தரம் எண் வழங்கப்படும்.
இதில், நடனம், ஓவியம், கலை, மாறுவேடம், கையெழுத்து, பழமொழி கூறல், பாடல், இசைக் கருவிகள் இசைத்தல், கதை, கட்டுரை எழுதுதல் என, பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன. 'இவற்றில், மாணவர், மாணவியர் மட்டுமே, கட்டாயம் பங்கேற்க வேண்டும். தனியார் இசைக் குழுவினரை அழைக்க கூடாது. திரைப்பட பாடல்கள், எந்த இடத்திலும் இடம்பெறக் கூடாது' என, பள்ளிக் கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.