குரூப் - 4' தேர்வுக்கான விண்ணப்ப பதிவுக்கு, வரும், 20ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.
அரசுத்துறைகளில், குரூப் - 4 பதவிகளில், 9,351 காலி இடங்களுக்கு, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியமான, டி.என்.பி.எஸ்.சி., பிப்., 11ல் போட்டி தேர்வை நடத்துகிறது. இதில், பங்கேற்பதற்கான ஆன்லைன் பதிவு, நவ., 14ல் துவங்கி, டிச., 13ல் முடியும் என, அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஆன்லைன் பதிவுக்கான அவகாசம், வரும், 20 வரையும், தேர்வு கட்டணம் செலுத்துவது, 21ம் தேதி வரையும் நீட்டிக்கப்பட்டு உள்ளதாக, டி.என்.பி.எஸ்.சி., செயலர், விஜயக்குமார் அறிவித்துள்ளார். நேற்று வரை, இத்தேர்வுக்கு, 18.33 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதுவரை நடந்த, குரூப் - 4 தேர்வுகளுக்கு விண்ணப்பித்தவர்களில், இதுவே அதிகபட்சம். கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து மட்டும், இதுவரை நடத்தப்பட்ட தேர்வுகளை விட, அதிக விண்ணப்பங்கள், இந்த முறை பதிவாகி உள்ளன.'ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள், தங்கள் விண்ணப்பம் ஏற்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளலாம். தேர்வு நடக்கும் தேதியில், எந்த மாற்றமும் இல்லை' என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.