WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, December 15, 2017

பேராசிரியர் தகுதிக்கான ’செட்’ தேர்வு அறிவிப்பு.


பேராசிரியர் பணிக்கான, ’செட்’ தகுதி தேர்வு, மார்ச், 4ல் நடக்கிறது. இதற்கான, ’ஆன்லைன்’ விண்ணப்ப பதிவு, வரும், 18ல்,
துவங்குகிறது. தமிழகத்தில் உள்ள அரசு பல்கலைகள், கல்லுாரிகளில் பேராசிரியர் பணியில் சேர, தேசிய அளவிலான, ’நெட்’ அல்லது தமிழக அளவிலான, ’செட்’ தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.தமிழக ’செட்’ தேர்வை, அரசின் சார்பில், கொடைக்கானல் தெரசா மகளிர் பல்கலை, இரண்டு ஆண்டுகளாக நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான தேர்வை, தெரசா பல்கலையே நடத்துகிறது. இதற்கான அறிவிப்பு, தெரசா பல்கலையின், www.motherteresawomenuniv.ac.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான, செட் தகுதி தேர்வு, மார்ச், 4ல் நடக்க உள்ளது. இதற்கான, ஆன்லைன் விண்ணப்ப பதிவு, வரும், 18ல், துவங்குகிறது. பிப்.,9க்குள் விண்ணப்பிக்க, தேர்வர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். கூடுதல் விபரங்களை, தெரசா பல்கலையின் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.