Thursday, December 21, 2017
குரூப் - 4' தேர்வு : 20 லட்சம் பேர் பதிவு
குரூப் - 4' தேர்வுக்கான விண்ணப்ப பதிவு, நேற்றுடன் முடிந்தது. முதல் முறையாக, 20 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள், இந்த தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.
அரசுத் துறைகளில், குரூப் - 4 பதவிகளில் காலியாக உள்ள, 9,351 இடங்களை நிரப்ப, பிப்., 11ல் தேர்வு நடக்கிறது. தமிழக அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., சார்பில், தேர்வு நடத்தப்படுகிறது. டிச., 20 வரை, விண்ணப்ப பதிவுக்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டிருந்தது; நேற்றுடன் விண்ணப்ப பதிவு முடிந்தது. இதில், 20 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள், 'ஆன்லைனில்' பதிவு செய்துள்ளனர். பதிவு செய்தவர்கள், தேர்வு கட்டணம் செலுத்த, இன்று கடைசி நாள். இதுவரை, வி.ஏ.ஓ., என்ற, கிராம நிர்வாக அதிகாரி பதவிக்கு, தனியாக தேர்வு நடத்தப்பட்டது; தற்போது, குரூப் - 4 தேர்வுடன் சேர்க்கப்பட்டுள்ளது. இந்தியாவில், இதுவரை எந்த தேர்வுக்கும், 20 லட்சத்துக்கும் அதிகமானோர், பதிவு செய்ததில்லை. நாடு முழுவதும் நடக்கும் மத்திய அரசு உயர் பதவிக்கான, சிவில் சர்வீசஸ் முதல் நிலை தேர்வில் கூட, அதிகபட்சம், 12 லட்சம் பேர் தான் பங்கேற்பர். ஆனால், டி.என்.பி.எஸ்.சி., நடத்தவுள்ள, குரூப் - 4 தேர்வுக்கு, 20 லட்சம் பேர் விண்ணப்பித்திருப்பது, அதிகாரிகளை ஆச்சரியம் அடைய செய்துள்ளது.குரூப் - 4 தேர்வில் இடம் பெற்றுள்ள, இளநிலை உதவியாளர், சர்வேயர், வரைவாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தர், வரி வசூலிப்பவர், வி.ஏ.ஓ., உள்ளிட்ட, பதவிகளைப் பெற, 10ம் வகுப்பு முதல், பிஎச்.டி., ஆராய்ச்சி படிப்பு முடித்தவர்களும் விண்ணப்பித்துள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.