WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, December 13, 2017

ஆசிரியர் பணிக்காக காத்திருப்பவர்களா நீங்கள்..? இதோ 8 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு!


நாடு முழுவதும் 137 முக்கிய நகரங்களில் செயல்பட்டு வரும் இந்திய ராணுவத்திற்கு சொந்தமான பள்ளிகளில் (Army Public School) காலியாக உள்ள 8 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர் மற்றும் முதுகலை பட்டதாரி
ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து வரும் 21-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அறிக்கை எண்.B/45706/CSB-2017/AWES மொத்த காலியிடங்கள்: 8000 பணி: Post Graduate Teachers (PGT) தகுதி: 50 சதவீத மதிப்பெண்களுடன் சம்மந்தப்பட்ட பாடப்பிரிவுகளில் முதுகலை பட்டம் பெற்று பி.எட் பட்டம் பெற்றிருக்க வேண்டும். பணி: Trained Graduate Teachers (TGT) தகுதி: 50 சதவீத மதிப்பெண்களுடன் சம்மந்தப்பட்ட பாடப்பிரிவுகளில் இளங்கலை பட்டத்துடன் பி.எட் முடித்து CTET அல்லது TNTET தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பணி: Primary Teachers (PRT) தகுதி: 50 சதவீத மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டத்துடன் பி.எட் முடித்தவர்கள், ஆசிரியர் கல்வி பயிற்சியில் டிப்ளமோ (D.T.Ed) முடித்து CTET அல்லது TNTET தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயதுவரம்பு: 01.04.2018 தேதியின்படி 40க்குள் இருக்க வேண்டும். 5 ஆண்டு ஆசிரியர் பணி அனுபவம் உள்ளவர்கள் 57க்குள் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: மூன்று கட்ட தகுதி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். முதல்கட்ட தேர்வில் கொள்குறிவகை கேள்விகள் கொண்ட ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடத்தப்படும். அதில் வெற்றிபெற்றவர்களுக்கு இரண்டான் கட்ட தேர்வன நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். பின்னர் மூன்றாம் கட்ட தேர்வான கற்பிக்கும் திறன் மற்றும் கணினி கையாளும் திறன் சோதிக்கப்பட்டு இறுதியில் தகுதியானவர்களுக்கு பணி உத்தரவு வழங்கப்படும். விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம். விண்ணப்பிக்கும் முறை: www.aps-csb.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.12.207 தேர்வு மையங்கள்: இந்தியா முழுவதும் 77 நகங்களில் ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறுகிறது. தமிழகத்தில் சென்னை, கோவை இரண்டு நகங்களில் மட்டும் தேர்வு நடைபெறுகிறது. ஆன்லைன் தேர்வு நடைபெறும் தேதி: 15,17.01.2018 ஆகிய இரு தேதிகளில் நடைபெறுகிறது. தேர்வு முடிவு வெளியிடப்படும் தேதி: 27.01.2018 மேலும் முழுமையான விரிவான தகுதிகள், தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://aps-csb.in/PdfDocuments/Guidelines.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.