WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, December 14, 2017

பாலிடெக்னிக் தேர்வு முடிவில் முறைகேடு : ஊழல் பின்னணியில் யார்?


பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில், மதிப்பெண்ணை கூடுதலாக வழங்கிய விவகாரத்தில், ஊழியர்கள் மீது விசாரணை துவங்கி உள்ளது.தமிழக அரசின் பாலிடெக்னிக் விரிவுரையாளர்
பணியில், 1,058 காலி இடங்களுக்கு, போட்டி தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வில், 1.33 லட்சம் பேர் பங்கேற்றனர். தேர்வு முடிவுகள், நவ., 7ல் வெளியானது. இதன்படி, தரவரிசையில் முன்னணி இடம் பெற்றவர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பும் அறிவிக்கப்பட்டது. விசாரணை : ஆனால், தேர்வு முடிவில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக, தேர்வர்கள் தரப்பில் புகார் எழுந்தது. தேர்வை நடத்திய, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., தலைவர், ஜெகனாதன், பள்ளிக்கல்வி செயலர், பிரதீப் யாதவ், உயர்கல்வி செயலர், சுனில் பாலிவால் ஆகியோருக்கு புகார் அனுப்பினர்.தேர்வு வாரியத்தினர் நடத்திய விசாரணையில், விடைத்தாள் மதிப்பீடும், தேர்வு முடிவு பட்டியலில் உள்ள மதிப்பெண்ணும், மாறுபட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து, தேர்வு எழுதிய, 1.33 லட்சம் பேருக்கும், விடைத்தாள் நகலை இணையதளத்தில், டி.ஆர்.பி.,வெளியிட்டுள்ளது. இதில், பல தேர்வர்களுக்கு மதிப்பெண் மாறியுள்ளது. குறிப்பாக, சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியலில், முன்னணியில் வந்துள்ள பலர், விடைத்தாளில் குறைந்த மதிப்பெண்ணே பெற்றுள்ளனர்.இந்த விவகாரம், டி.ஆர்.பி.,யில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து, டி.ஆர்.பி., தலைவருக்கான நேர்முக உதவியாளர், அலுவலக உதவியாளர்கள்...கணினி இயக்குபவர்கள், கண்காணிப்பாளர்கள், தேர்வு முடிவு பட்டியல் தயாரித்த, கணினி பதிவாளர்கள், துணை இயக்குனர்கள் என, அனைவரிடமும் விசாரணை துவங்கி உள்ளது. ஒழுங்கு நடவடிக்கை : பல ஆண்டுகளாக, டி.ஆர்.பி.,யில் பணியாற்றுவோர் யார்; அவர்களுக்கான பின்னணி தொடர்புகள் என்ன; கணக்கு காட்டாமல் சொத்து உள்ளதா; மறைமுகமாக ஊழல் முறைகேடுக்கு துணை போயிருக்கின்றனரா...ஏற்கனவே நடந்த, 'டெட்' மற்றும் ஆசிரியர் நியமன தேர்வுகளில் ஊழல் நடந்துள்ளதா; அரசியல் மற்றும் அதிகாரிகளின் செல்வாக்கு பெற்றவர்கள் யார் என, படிப்படியாக விசாரணை துவங்கியுள்ளது.இதில், பலர் சிக்கலாம் என்றும், டி.ஆர்.பி., ஊழியர்கள் சிலர் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும், தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், உறுப்பினர் செயலர், தேர்வு வாரிய உறுப்பினர்கள், இணை இயக்குனர்கள், விடைத்தாள் திருத்திய பின், பட்டியலை சரிபார்த்த அதிகாரிகள், தங்களிடம் உள்ள தேர்வு ஆவணங்களை ஆய்வு செய்யவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.