WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, December 14, 2017

குரூப் - 4 தேர்வு பதிவு இணையதளம் முடக்கம்.


குரூப் - 4 தேர்வுக்கு பதிவு செய்ய, நேற்று கடைசி நாள் என்பதால், லட்சக்கணக்கானோர் முயற்சித்ததால், இணையதளம் முடங்கியது. தமிழக அரசுத் துறைகளில், குரூப் - 4 பதவிகளில், 9,351
காலியிடங்களை நிரப்ப, பிப்., 11ல், எழுத்து தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், கிராம நிர்வாக அதிகாரிகளுக்கான, 494 காலி இடங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த தேர்வுக்கு, நேற்று முன்தினம் வரை, 15 லட்சம் பேர் பதிவு செய்திருந்தனர். பதிவு செய்வதற்கு, நேற்று கடைசி நாள். ஒரே நேரத்தில் லட்சக்கணக்கானோர் பதிவு செய்ய முயற்சித்ததால், இணைய தளத்தின் செயல்பாடு முடங்கியது. மாலையில், இணைய தளம் ஓரளவு இயங்க துவங்கியது. ஆனாலும், தேர்வுக்கு பதிவு செய்ய முடியாமல், பலர் ஏமாற்றம் அடைந்தனர். பத்தாம் வகுப்பு தேர்ச்சியை தகுதியாக கொண்ட, குரூப் - 4 தேர்வில், அனைவரும் பங்கேற்கும் வகையில், கூடுதலாக, இரண்டு நாள் அவகாசம் வழங்க கோரிக்கை எழுந்துள்ளது. 'இந்த கூடுதல் அவகாசத்தில் விண்ணப்பிப்பவர்களிடம், கூடுதலாக கட்டணம் வசூலிக்கலாம்' என்றும், பயிற்சி மைய நிர்வாகிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.