Thursday, December 7, 2017
அரையாண்டுத் தேர்வுகள் இன்று தொடக்கம்
தமிழக பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வுகள் வியாழக்கிழமை தொடங்கவுள்ளன.
தமிழகத்தில் செயல்பட்டு வரும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில், இந்த ஆண்டுக்கான அரையாண்டுத் தேர்வு குறித்த அறிவிப்பை பள்ளிக் கல்வித் துறை கடந்த அக்டோபர் மாதம் வெளியிட்டது. மேலும், தேர்வுக்கான அட்டவணையும் வெளியிடப்பட்டது.
இந்த ஆண்டு முதல் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு மாநிலம் முழுவதும் ஒரே கேள்வித்தாள்கள் இடம்பெற உள்ளன. தற்போது கேள்வித்தாள்கள் அச்சிட்டு மாவட்டங்களுக்கு அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. இதையடுத்து வியாழக்கிழமை (டிச. 7) அரையாண்டு தேர்வுகள் தொடங்குகின்றன. பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு டிசம்பர் 7 முதல் டிசம்பர் 23 -ஆம் தேதி வரையிலும், பத்தாம் வகுப்புக்கான தேர்வுகள் டிசம்பர் 11 முதல் டிசம்பர் 23 -ஆம் தேதி வரையிலும் நடைபெறவுள்ளன. அதற்கு பிறகு விடுமுறை அறிவிக்கப்படும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.