வீட்டு வசதி வாரியத்தில், உதவி பொறியாளர், சர்வேயர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகளை வெளியிடுவதில், முறைகேடுகள் நடப்பதாக புகார் எழுந்துள்ளது.
வீட்டு வசதி வாரியத்தில், உதவி பொறியாளர், சர்வேயர், தொழில்நுட்ப உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்காக, சமீபத்தில், நேரடி தேர்வு நடத்தப்பட்டது. இதன் முடிவுகள், வீட்டுவசதி வாரிய இணையதளத்தில், டிச., 23ல் வெளியிடப்பட்டன. வழக்கமாக தேர்வு முடிவுகள் ஒட்டு மொத்தமாக வெளியிடப்படும்.
யார், எவ்வளவு மதிப்பெண் பெற்றனர் என்பது, வெளிப்படையாக அனைவருக்கும் தெரியும். ஆனால், இம்முறை, குறிப்பிட்ட விண்ணப்பதாரர் மட்டுமே, விபரங்களை பெற முடியும் வகையில், மாற்றம் செய்யப்பட்டது.
அதனால், தேர்வு முறைகேடுகளை மறைக்கும் முயற்சி என, தொழிற்சங்க நிர்வாகிகள், வீட்டு வசதி துறை செயலருக்கு, புகார் அளித்துள்ளனர். இந்த புகாரால் தேர்வு முடிவுகள் சர்ச்சையில் சிக்கி உள்ளன.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.