மாணவர்களுக்கு, உளவியல் ஆலோசனை வழங்கும் நோக்கில் கொண்டுவரப்பட்ட, ஹெல்ப் லைன் எண்ணை, அனைத்து பள்ளி தகவல் பலகையிலும் விளம்பரப்படுத்த, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில், பள்ளி மாணவர்கள் மத்தியில் எழும், தற்கொலை எண்ணங்கள், தேர்வு பயம், பதட்டத்தில் இருந்து விடுவிக்கவும், உளவியல் ஆலோசனை வழங்கும் நோக்கிலும், கடந்த 2014ல், நடமாடும் உளவியல் மையம் கொண்டுவரப்பட்டது.
மூன்று மாவட்டத்திற்கு, ஒரு மையம் மட்டுமே உள்ளதால், அனைத்து பள்ளிகளுக்கும், ’விசிட்’ அடிப்பதில், சிக்கல் ஏற்பட்டது. இதனால், கூடுதலாக ஏழு மையங்கள் அமைக்க, கடந்தாண்டில் அறிவிப்பு வெளியானது. போதிய மருத்துவ நிதியில்லாததால், இத்திட்டம் தற்போது முடங்கி கிடக்கிறது.
பொதுத்தேர்வு நெருங்கவுள்ளதால், ஹெல்ப் லைன் சேவை அறிமுகப்படுத்த, கல்வித்துறை திட்டமிட்டது. இதன்படி, 14417 என்ற, இலவச சேவை எண் கொண்டுவரப்பட்டது. இதில், உளவியல் கவுன்சிலிங் மட்டுமல்லாமல், உயர்கல்வி குறித்த ஆலோசனைகள், படிப்புகள், கல்வி நிறுவனங்கள் குறித்த, அனைத்துவித சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்க, முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, இச்சேவை மைய எண்ணை, பள்ளி தகவல் பலகையில் ஒட்டி, மாணவர்களுக்கு தெரியப்படுத்துமாறு, தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், ’பள்ளிக்கல்வித்துறையின், ஹெல்ப் லைன் எண்ணில், மாவட்ட வாரியாக உள்ள பள்ளிகள், நுாலகங்கள், சிறப்பு மையங்கள், புத்தகங்கள் வினியோகம், தேர்வு அட்டவணை உள்ளிட்ட, அனைத்து தகவல்களையும், பெற்றோர் தெரிந்து கொள்ளலாம். உயர்கல்வி ஆலோசனை, கவுன்சிலிங் அளிப்பதோடு, இச்சேவையை மேம்படுத்தி கொள்ள, அழைப்பாளர்களிடம் இருந்து, கருத்து கேட்டு, பதிவு செய்யப்படவுள்ளது.
”இச்சேவை எண், விரைவில் செயல்பாட்டுக்கு வரவுள்ளதால், மாணவர்களுக்கு தெரியப்படுத்துமாறு, கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். பொதுத்தேர்வுக்கு முன், தேர்வு சமயம் மற்றும் முடிவுகள் வெளியான பின்பும், சந்தேகங்களுக்கு விளக்கம் பெறும் வகையில், இச்சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதை, அரையாண்டு விடுமுறைக்கு பின், நடக்கும் கூட்டத்தில், பெற்றோருக்கு தெரியப்படுத்த முடிவு செய்துள்ளோம்’ என்றனர்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.