WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, December 7, 2017

அரையாண்டுத் தேர்வுகள் இன்று தொடக்கம்

தமிழக பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வுகள் வியாழக்கிழமை தொடங்கவுள்ளன. தமிழகத்தில் செயல்பட்டு வரும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில், இந்த ஆண்டுக்கான அரையாண்டுத் தேர்வு குறித்த அறிவிப்பை பள்ளிக் கல்வித் துறை கடந்த அக்டோபர் மாதம் வெளியிட்டது. மேலும், தேர்வுக்கான அட்டவணையும் வெளியிடப்பட்டது. இந்த ஆண்டு முதல் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு மாநிலம் முழுவதும் ஒரே கேள்வித்தாள்கள் இடம்பெற உள்ளன. தற்போது கேள்வித்தாள்கள் அச்சிட்டு மாவட்டங்களுக்கு அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. இதையடுத்து வியாழக்கிழமை (டிச. 7) அரையாண்டு தேர்வுகள் தொடங்குகின்றன. பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு டிசம்பர் 7 முதல் டிசம்பர் 23 -ஆம் தேதி வரையிலும், பத்தாம் வகுப்புக்கான தேர்வுகள் டிசம்பர் 11 முதல் டிசம்பர் 23 -ஆம் தேதி வரையிலும் நடைபெறவுள்ளன. அதற்கு பிறகு விடுமுறை அறிவிக்கப்படும்.

பிளஸ் 1 செய்முறை தேர்வு- கையேடுகள் என்னாச்சு : குழப்பத்தில் ஆசிரியர்கள்.

பிளஸ் 1 பொது தேர்விற்கான செய்முறை தேர்வு குறித்த வழிகாட்டுதல் கையேடுகள் வழங்கப்படாததால் மாணவர்களை எவ்வாறு தேர்வுக்கு தயார்படுத்த வேண்டும் என்ற குழப்பத்தில் ஆசிரியர்கள் உள்ளனர். இக்கல்வியாண்டு முதல் பிளஸ் 1 தேர்வு பொது தேர்வாக அறிவிக்கப்பட்டு, மார்ச் 7 முதல் துவங்கும் என தேர்வு அட்டவணையை கல்வித்துறை வெளியிட்டது. ஆனால் செய்முறை தேர்வு குறித்து எதுவும் குறிப்பிடவில்லை.இதனால் செய்முறை உள்ளதா, இல்லையா என குழப்பம் நீடித்த நிலையில், 'பிளஸ் 1 பொதுத் தேர்வுடன் பிப்ரவரியில் செய்முறை தேர்வும் நடத்தப்படும்,' என அக்டோபரில் அறிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை தேதி அறிவிக்கப்படவில்லை. பிப்.,யில் இத்தேர்வு நடக்கும் வாய்ப்பு உள்ளதாக கல்வி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து ஆசிரியர்கள் கூறுகையில், "செய்முறை தேர்வை எப்படி நடத்துவது, மாணவர்களை எவ்வாறு தயார்படுத்துவது, வினாக்கள், அதற்கான மதிப்பெண் முறை தொடர்பான எந்த விவரமும் இதுவரை ஆசிரியர்களுக்கு தெரியப் படுத்தவில்லை. பல அரசு பள்ளிகளில் பிளஸ் 1 செய்முறை தேர்வு குறித்த விழிப்புணர்வு இல்லாததால், தேர்வை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்ற அச்சத்தில் மாணவர்கள் உள்ளனர்," என்றனர். இதுகுறித்து தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தலைவர் சுரேஷ் கூறியதாவது: பிளஸ் 2வுக்கு கல்வியாண்டு ஆரம்பத்திலேயே, தேர்வு வழிகாட்டுதல் கையேடுகள் வழங்கப்படுகின்றன. ஆனால் பிளஸ் 1க்கான கையேடுகள் கூட இன்னும் வழங்கப்படவில்லை. பிப்ரவரியில் செய்முறை துவங்கும் பட்சத்தில், மாணவர்களை எவ்வாறு தயார்படுத்த வேண்டும் என்ற புரிதல் இன்றி ஆசிரியர்களும் தவிக்கின்றனர். மாணவர்களும் அச்சத்தில் உள்ளனர். இத்தேர்வு குறித்து கல்வித்துறை தெளிவான வழிகாட்டுதல்களை உடன் வழங்க வேண்டும், என்றார்.

தேசிய திறனறி தேர்வு டிச., 16க்கு மாற்றம்.

எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகைக்கான தேர்வு, டிச., 16க்கு மாற்றப்பட்டுஉள்ளது. எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, கல்வி உதவித்தொகை வழங்குவதற்கான, தேசிய வருவாய் வழி மற்றும் திறனறி தேர்வு, டிச., 9ல் நடக்கும் என, அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த தேர்வு, தொழில்நுட்ப காரணங் களால், டிச., 16ல் நடக்கும் என, அரசு தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்

ஆன்லைன்' முறையில் பள்ளிகள் அங்கீகாரம்.

அடுத்த ஆண்டு முதல், தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு, 'ஆன்லைன்' முறையில் அங்கீகாரம் வழங்கப்பட உள்ளது; விதிகளை மீறும் பள்ளிகளுக்கு, அங்கீகாரம் கிடைக்காது. தமிழகத்தில், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் நர்சரி, மெட்ரிக் பள்ளிகள் செயல்படுகின்றன. அவற்றில், நர்சரி பள்ளிகளுக்கு, தொடக்க கல்வி இயக்குனரகமும், மெட்ரிக் பள்ளிகளுக்கு, மெட்ரிக் இயக்குனரகமும் அங்கீகாரம் வழங்குகின்றன. இந்த அங்கீகாரத்துக்கு, தமிழக அரசின் பல்வேறு துறைகளில் இருந்து, சான்றிதழ்கள் பெற வேண்டும். கும்பகோணம் பள்ளி தீ விபத்துக்கு பின் அமலுக்கு வந்த, சிட்டிபாபு கமிட்டியின் பரிந்துரைகளையும் பின்பற்ற வேண்டும். இந்நிலையில், அங்கீகார விதிகள் மற்றும் நடைமுறை குழப்பங்களை தீர்க்க, வரும் கல்வி ஆண்டு முதல், 'ஆன்லைன்' அங்கீகார முறை அமலுக்கு வருகிறது. சி.பி.எஸ்.இ.,யை போல், ஆன்லைனில் ஆவணங்களை பரிசீலித்து, அங்கீகாரம் வழங்கப்பட உள்ளது. இந்த முறையில், தொழில்நுட்ப ரீதியாக, 'சாப்ட்வேர்' கேட்கும் ஆவணங்களை வழங்கிய பின், பள்ளிகள் பதிவு செய்ய முடியும். அதனால், விதிமீறிய பள்ளிகள், மீண்டும் அங்கீகாரம் பெற முடியாது என, பள்ளிக்கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

புது பாட திட்டத்தில் கலாம், நம்மாழ்வார் - 'கூகுள்' சுந்தர் பிச்சைக்கும் இடமுண்டு.

தமிழக பள்ளிக்கல்வி யின் புதிய பாடத்திட்டத் தில், முன்னாள் ஜனாதிபதி, அப்துல் கலாம், இயற்கை விஞ்ஞானி, நம்மாழ்வார் பற்றிய பாடங்கள் இடம் பெற உள்ளன. தமிழகத்தில், 14 ஆண்டுகளாக, பள்ளிக்கல்வி பாடத்திட்டம் மாற்றப்படவில்லை. 10 ஆண்டுகளில், தொழில்நுட்பம், விவசாயம், அரசு நிர்வாக முறை மற்றும் சர்வதேச அரசியல் என, அனைத்திலும் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. கோரிக்கை ஆனால், தற்போதைய பாடத்திட்டம், இன்னும் பழைய முறைகளையே பயிற்றுவிக்கிறது. எனவே, பாடத்திட்டத்தை மாற்ற, கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, புதிய பாடத்திட்டம் உருவாக்க, தமிழக அரசின் சார்பில், குழு அமைக்கப்பட்டது. பள்ளிக் கல்வி முதன்மை செயலர், பிரதீப் யாதவ் மேற்பார்வையில், பள்ளிக்கல்வி செயலர், உதயசந்திரன் தலைமையில், பாடத்திட்ட பணிகள் நடக்கின்றன. புதிய பாடத்திட்டம் குறித்து, ஒன்றாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, மாதிரி பாடத்திட்ட வரைவு அறிக்கை, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான, எஸ்.சி.இ.ஆர்.டி.,யின், www.tnscert.org இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. அது தொடர்பாக, பல்வேறு தரப்பினர் கருத்துக்கள் தெரிவிக்கின்றனர்.இந்நிலையில், பாடப் புத்தகம் எழுதும் பணிகள் தீவிரமாக நடக்கின்றன. பள்ளிக்கல்வித் துறை, உயர் கல்வித் துறை, தனியார் கல்லுாரிகள், பல்கலை பேராசிரியர்கள், இப்பணியில் ஈடுபட்டு, பாடவாரியாக புத்தகம் எழுதி வருகின்றனர். பாடங்களை பொறுத்தவரை, தமிழக பண்பாடு, கலாசாரம் மட்டுமின்றி, அறிவியல், இயற்கை விவசாயம், உணவு பாதுகாப்பு, சுகாதாரம், தகவல் தொழில்நுட்பம் என, அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கி எழுதப்படுகிறது. அந்த வகையில், இந்தியாவில் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, சர்வதேச அளவில் புகழ்பெற்று, இளைய தலைமுறையினரிடம் மவுன புரட்சி ஏற்படுத்தியவர்கள் பற்றிய பாடங்கள் எழுதப்படுகின்றன.அதில், முன்னாள் ஜனாதிபதி, அப்துல் கலாம் குறித்து பாடம் இடம்பெற உள்ளது. கலாமின் பள்ளி, கல்லுாரி படிப்பு, இளம் விஞ்ஞானியாக, இந்திய உபகரணங்களை பயன்படுத்தி, அவர் தயாரித்த, எஸ்.எல்.வி., ராக்கெட், அக்னி ஏவுகணை, 'பொக்ரான்' குண்டு வெடிப்பு என, அனைத்து விஞ்ஞான அம்சங்களும், இதில் இடம் பெறும் என, தெரிகிறது. ஆராய்ச்சி அதே போல், இயற்கை விஞ்ஞானம், சுற்றுச்சூழல் கெடாமல் மண்வளம் பாதுகாப்பு குறித்து, இயற்கை விஞ்ஞானி, நம்மாழ்வார் மேற்கொண்ட ஆராய்ச்சிகளும் இடம் பெற உள்ளன. தமிழகத்தில் படித்து, சர்வதேச அளவில் புகழ் பெற்ற, 'கூகுள்' தலைமை செயல் அதிகாரி, சுந்தர் பிச்சை பற்றிய தகவல்களும், புதிய பாடத்திட்டத்தில் இடம்பெற உள்ளதாக, பள்ளிக்கல்வி வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.