WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, January 18, 2018

திருப்புதல் தேர்வு இன்று(ஜன.,18) துவக்கம்.

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, முதல் திருப்புதல் தேர்வு, இன்று துவங்கி வரும் 31ம் தேதி வரை நடக்கிறது.


பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள், பொதுத்தேர்வை சிறப்பாக எதிர்கொள்ள, அரையாண்டு தேர்வுக்கு பின், திருப்புதல் தேர்வுகள் நடத்துவது வழக்கம். இத்தேர்வு, தமிழகம் முழுக்க, இன்று (ஜன., 18ம் தேதி) துவங்கி வரும், 31ம் தேதி வரை நடக்கிறது.


ஒரே வினாத்தாள் பாணியில், முழு பாடத்திட்டத்தில் இருந்து, வினாக்கள் இடம்பெறும். நுாறு மதிப்பெண்களுக்கு நடக்கும் இத்தேர்வு, காலை 9:30 முதல், மதியம் 12:30 மணி வரை எழுத அனுமதிக்கப்படுகிறது. 


நோடல் மையங்களில் இருந்து, அந்தந்த பள்ளிகளுக்கு, வினாத்தாள் அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு பின், கலைப்பாட மாணவர்களுக்கு, இரண்டாம் யூனிட் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டு உள்ளதாக, தலைமை ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.