WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, January 1, 2018

3ம் பருவ புத்தகங்கள் நாளை வினியோகம்.

மூன்றாம் பருவ பாடபுத்தகங்கள், சீருடைகள், நாளை பள்ளி திறந்தவுடன், வினியோகிக்கப்படுகிறது. 
தமிழகத்தில் ஒன்று முதல், ஒன்பதாம் வகுப்பு வரை, முப்பருவ கல்வி முறை செயல்படுத்தப்படுகிறது. இரண்டாம் பருவத்தேர்வு முடிந்து, விடுமுறை விடப்பட்டுள்ளது. மூன்றாம் பருவ வகுப்புகள், நாளை துவங்க உள்ளது. 


பள்ளி திறக்கும் முதல் நாளிலேயே, அனைத்து மாணவர்களுக்கும் வினியோகிக்க வசதியாக, அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகங்களில் இருந்து, பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 


புத்தகங்களுடன் சீருடைகளும் வழங்கப்பட உள்ளதால், சீருடைகளும் அந்தந்த பள்ளிகளின் தேவைப்பட்டியல் அடிப்படையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. முதல் நாளில் வழங்கு, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.