Tuesday, January 2, 2018
பள்ளிகளை தரம் உயர்த்த மறுக்கக்கூடாது: தமிழக அரசுக்கு உத்தரவு.
இருபது ஆண்டுகளுக்கு முந்தைய விதிகளைக் காரணம் காட்டி பள்ளிகளை தரம் உயர்த்த மறுக்கக் கூடாது என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில், விழுப்புரம் மாவட்டம் அத்தியூர் திருக்கை கிராமத்தைச் சேர்ந்த பெருமாள், தங்களது கிராமத்தில் உள்ள உயர் நிலைப்பள்ளியை, மேல் நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த உத்தரவிடக் கோரி பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
இவ்வழக்கு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம் மற்றும் கே.ரவிச்சந்திரபாபு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் 4.5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள பள்ளியை தரம் உயர்த்த பொது மக்கள் பங்களிப்பாக ரூ.2 லட்சம் செலுத்திய பின்னரும் இதுவரை அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என வாதிடப்பட்டது.
அப்போது அரசு தரப்பில் கடந்த 1997-ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட விதிகளின்படி, இந்தப் பள்ளிக்கு போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை. மாணவர்களின் எண்ணிக்கையும் நூறுக்கும் குறைவாக உள்ளது. பள்ளியைச் சுற்றி 8 கிலோமீட்டர் தொலைவுக்குள் வேறு மேல் நிலைப்பள்ளிகள் இருக்கக் கூடாது. ஆனால் இந்தப் பள்ளியின் அமைவிடத்தைச் சுற்றி 3 பள்ளிகள் உள்ளதாக வாதிடப்பட்டது.
அரசுதரப்பு வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், "20 ஆண்டுகளுக்கு முன் பிறப்பிக்கப்பட்ட விதிகளைக் காரணம் காட்டி பள்ளியை தரம் உயர்த்த அரசு மறுக்கிறது. இந்த 20 ஆண்டுகளில் கல்வியில் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. பள்ளிகளை தரம் உயர்த்தும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிக்கான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது அரசின் கடமையாகும். கட்டமைப்பு வசதிகள் சரியாக இருந்தால் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். மக்கள் அளித்துள்ள பங்களிப்புத் தொகையுடன் கூடுதல் நிதியை ஒதுக்கி வரும் கல்வியாண்டில் பள்ளியை தரம் உயர்த்துவது குறித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க பள்ளிக் கல்வித் துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.