WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, January 7, 2018

அரசு கலைக் கல்லூரிகளில் பணிபுரியும் கௌரவ விரிவுரையாளர்களை சிறப்பு TRB மூலம் பணிநிரந்தரம் செய்யஉள்ளதாக உயர்கல்வித்துறை செயலர் மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் தமிழ்நாடு அரசுகல்லூரி கௌரவ விரிவுரையாளர் கழகத்திடம் தகவல்

தமிழகத்தில் உள்ள அரசு கலைக்கல்லூரிகளில் சுமார் 3250 பேர் கௌரவ விரிவுரையாளர்களாக சுமார் முதல் மற்றும் இரண்டாம் சுழற்சியில் பணிபுரிந்து வருகின்றனர்.தமிழக அரசு கௌரவ விரிவுரையாளர்களுக்கு யுஜிசி நிர்ணயித்துள்ள அடிப்படை சம்பளம் தராமல்  சனவரி 2010 முதல்   31.12.2017  வரை குறைந்த சம்பளம் வழங்கி வந்துள்ளது . சம்பளம் உயர்வு கேட்டு கௌரவ விரிவுரையாளர்கள்   போராட்டம் நடத்தினாலும் சரி அல்லது பேச்சுவார்த்தைக்கு சென்றாலும் சரி கௌரவ விரிவுரையாளர் அமைப்புகளின் பிரதிநிதிகளிடத்தில் தமிழக அரசு பிரித்தாளும் கொள்கை மூலம் பேச்சுவார்த்தைக்கு செல்லும் கௌரவ விரிவுரையாளர்களிடம் அரசு " உங்கள் அனைவரையும் பணிநிரந்தரம் செய்ய இயலாது . உங்களில் யுஜிசி நிர்ணயித்துள்ள  தகுதியுடன் பணிபுரியும்  கௌரவ விரிவுரையாளர்களை மட்டுமே பணிநிரந்தரம் செய்ய இயலும் " என தமிழக அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில் 5.1.2018 ல் தமிழ்நாடுஅரசு கலைக்கல்லூரி  கௌரவ விரிவுரையாளர்கள் உயர்கல்வி அமைச்சர் மற்றும் உயர்கல்வி செயலர் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர் . அந்த  சமயத்தில்  உயர்கல்விஅமைச்சர்  மற்றும் உயர்கல்வி செயலர் அவர்கள் ஆகிய இருவரும்  கௌரவ விரிவுரையாளர்களை special TRB மூலம் தேர்வுச் செய்ய உள்ளோம் என தெரிவித்து உள்ளனர். இதனால் யுஜிசி நிர்ணயித்துள்ள தகுதியுடன் பணிபுரியும் கௌரவ விரிவுரையாளர்கள் மட்டுமே பலன் அடைய வாய்ப்பு உள்ளது. இதனால் குறைந்த சம்பளத்துடன் இத்தனை ஆண்டுகளாக  பணிபுரிந்து வரும் யுஜிசி நிர்ணயித்துள்ள தகுதியை இன்னும் அடையாத கௌரவ விரிவுரையாளர்கள் கடுமையாக  பாதிக்க படக்கூடும் என தெரிகிறது . எனவே special SET exam வைத்து விட்டு special college TRB நடத்தினால் கௌரவ விரிவுரையாளர்கள் அதிகம் பேர் பயன் அடைவார்கள்  . அதுவரை எந்த சாதரண TRB யோ , அல்லது special TRB யோ  எவ்வளவு காலி பணி இடத்தினை கௌரவ விரிவுரையாளர்கள் கொண்டு special TRB மூலம் நிரப்புவார்கள்  என தெளிவாக தெரிவிக்கவில்லை  , வரப்போகும் College TRB ஆனது சிறப்பு TRB ஆக இருக்குமா? ,  இல்லை சிறப்பு TRB  என்று தனி அறிவிப்பு வருமா ?  எது எப்படியோ கௌரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தர படுத்துவேன் என்று கூறிய மறைந்த முதல்வர் அம்மாவின் 2011 தேர்தல் வாக்குறுதி 6 ஆண்டுகளுக்கு பின் நிறைவேற உள்ளது கௌரவ விரிவுரையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியே. ஆனால் இந்த special TRB கடந்த பாலிடெக்னிக்  விரிவுரையாளர் தேர்வு போல் இல்லாமல் நேர்மையான முறையில் நடந்தால் நன்றாக இருக்கும் என கௌரவ விரிவுரையாளர்கள் கருதுகின்றனர். அதனை மீறியும் யாரெனும் பணிநிரந்தர படுத்த பணம் கேட்டால் அவர்களை ஆதாரத்துடன் சட்டத்திற்கு முன் நிறுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசுகல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் கழகம் கௌரவ விரிவுரையாளர்களை வேண்டிக்கொள்கிறது என தெரிவித்து உள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.