WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, October 31, 2018

ரூ.1 லட்சத்து 77 ஆயிரம் சம்பளத்தில் தமிழக வனத்துறையில் அதிகாரி வேலை வேண்டுமா?: உடனே விண்ணப்பிக்கவும்!


தமிழக வேளாண் துறையில் தோட்டக்கலை உதவி இயக்குநர், தோட்டக்கலை உதவி இயக்குநர் போன்ற 175 பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் நவம்பர் 21க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 175


பதவி: Assistant Director of Horticulture - 74
சம்பளம்: மாதம் ரூ.56100 - 177500 
தகுதி: தோட்டக்கலைத் துறையில் எம்.எஸ்சி முடித்திருக்க வேண்டும்.

பதவி: Horticultural Officer - 101
சம்பளம்: மாதம் ரூ.37700-119500
தகுதி: தோட்டக்கலைத் துறையில் பி.எஸ்சி முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.07.2018 தேதியின்படி 20 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.

கட்டணம்: தேர்வுக் கட்டணமாக ரூ.200 மற்றும் விண்ணப்ப பதிவு கட்டணமாக ரூ.150 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மற்றும் வங்கிகள் மூலமாவும் செலுத்தலாம். எஸ்.சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஒன்டைம் பதிவுக்கட்டணம் என்ற முறையில் விண்ணப்பிப்பவர்கள் தேர்வுக் கட்டணம் மட்டும் செலுத்தினால் போதுமானது. 

தேர்வு கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 23.11.2018

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

எழுத்துத் தேர்வு மையம்: சென்னை, மதுரை, கோவை மட்டுமே.

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: வரும் ஜனவரி 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in / www.tnpscexams.net / www.tnpscexams.in ஆகிய இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tnpsc.gov.in/notifications/2018_29_notyfn_adhho.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.11.2018

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.