பிளஸ் 2 துணை தேர்வுக்கான முடிவுகள், இன்று வெளியாகின்றன.அரசு தேர்வு துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:பிளஸ் 2 வகுப்பில், செப்., மற்றும் அக்டோபரில், துணை தேர்வு எழுதியவர்களுக்கு, இன்று தேர்வு முடிவு வெளியிடப்பட உள்ளது. தேர்வர்கள், இன்று பிற்பகலில், www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யலாம்.விடைத்தாள் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடுக்கு, நாளை காலை, 11:00 மணி முதல், நவ., 2 மாலை, 5:45 மணி வரை, விண்ணப்பிக்கலாம். மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் சென்று, உரிய கட்டணம் செலுத்தி, பதிவு செய்ய வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுஉள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.