தொடர் மழை எச்சரிக்கையின்படி, மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில், ஆறு மாவட்டங்களுக்கு, நாளை, மிக அதிக கனமழைக்கான, 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி, கோவை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில், இன்று, 12 செ.மீ., முதல் 21 செ.மீ., வரை பெய்யும் என, கணிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை இறுதி கட்டத்தில் உள்ள நிலையில், தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களுக்கு, 'ரெட் அலர்ட்' என்ற சிவப்பு குறியீடு எச்சரிக்கையை, வானிலை மையம் விடுத்துள்ளது. இந்த தொடர் மழையின் முதல் நாளான, நேற்று முன்தினம், மாநிலம் முழுவதும் கனமழை கொட்டியது. நேற்று அதிகாலை வரை, பல இடங்களில் இடைவிடாமல் மழை கொட்டியது.
நான்கு நாட்களுக்கு, சென்னை வானிலை மையம் விடுத்த தொடர் எச்சரிக்கையின் படி, இன்று, மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளுக்கு, 'ஆரஞ்ச்' நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இதன்படி, கோவை, நீலகிரி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில், இன்று, மிக கனமழை கொட்டும். சில இடங்களில், 12 செ.மீ., முதல், 20.5 செ.மீ., வரை பெய்ய வாய்ப்புள்ளதாக, வானிலை மையம் கணித்துள்ளது.
நாளை தமிழகம் மற்றும் கேரளாவில், மிக அதிக கனமழை பெய்யும் என்பதற்கான, 'ரெட் அலர்ட்' விடப்பட்டுள்ளது. இதன்படி, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களுக்கு உச்சபட்ச மழைக்கான எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதன்படி, 20.5 செ.மீ.,க்கு மேல், மழை பெய்ய வாய்ப்புள்ளது.
திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில், மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் மிக கனமழையான, 20.5 செ.மீ., வரை மழை பெய்யும்; திருச்சி மாவட்டத்தில், 12 செ.மீ., வரை கனமழை பெய்யும் என, சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
சென்னையை பொறுத்த வரை, இன்றும், நாளையும் வானம் மேக மூட்டத் துடன் காணப்படும். சில இடங்களில் மிதமான மழை பெய்யலாம். சராசரி வெப்பநிலை, 28 டிகிரி செல்ஷியசாக குறையும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால், நிலைமையை சமாளிக்க, அரசு, பல்வேறு துறைகளையும் முடுக்கிவிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது.
நேற்றைய மழை: சென்னை, 'டாப்'
நேற்று காலை, 8:30 மணி நிலவரப்படி, 24 மணி நேரத்தில், தமிழகத்தில் அதிகபட்சமாக, சென்னை அருகே எண்ணுாரில், 13 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. செங்கல்பட்டு, 12; சோழவரம், 9; மரக்காணம், பொன்னேரி, 8; பழநி, திண்டிவனம், நாகர்கோவில், பாளையங்கோட்டை மற்றும் ஆனைக்காரன் சத்திரத்தில், 7 செ.மீ., மழை பெய்துள்ளது. செங்கம், ராதாபுரம், கேளம்பாக்கம், மதுராந்தகம், செஞ்சி, செங்குன்றம், சென்னை விமான நிலையம், ஊத்தங்கரை மற்றும் பூந்தமல்லியில், 6 செ.மீ., மழை பதிவானது. பேச்சிப்பாறை, வட சென்னை, திருவண்ணாமலை, திருத்துறைப்பூண்டி, காஞ்சிபுரம், ஆரணி, குடவாசல், செங்கோட்டை, திருவாரூர், சென்னை மயிலாப்பூர் மற்றும் காரைக்காலில், 5 செ.மீ., மழை பதிவானது. தரமணி, விழுப்புரம், நாகை, குன்னுார், தாம்பரம், சீர்காழி, வந்தவாசி, பரங்கிப்பேட்டை, பண்ருட்டி மற்றும் போச்சம்பள்ளியில், 4 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. இதேபோல், தமிழகத்தின் அனைத்து இடங்களிலும், பரவலாக மழை பெய்துள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.