WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, October 6, 2018

சென்னையில் இன்று(அக்.6) பள்ளி, கல்லூரிகள் இயங்கும்: மாவட்ட ஆட்சியர்.





சென்னை, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் என மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் இலங்கையையொட்டி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் வரும் 7-ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் மிகக் கனமழை இருக்கும் என பேரிடர் மேலாண்மை இயக்குநரகம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்தது. 
இதனிடையே, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த 2 நாட்கள் மழை பெய்து வருகிறது. நேற்று முன் தினம் இரவு பெய்த தொடர் பழை காரணமாக நேற்று தமிழகத்தில் உள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவாரூர், காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்தனர்.
இந்நிலையில் சென்னையில் இன்று மழை குறைந்த நிலையில் சென்னை, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.