WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, October 10, 2018

சைனிக் பள்ளி சேர்க்கை அறிவிப்பு.

உடுமலை, அமராவதி நகர் சைனிக் பள்ளியில், ஆறு மற்றும், ஒன்பதாம் வகுப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்டம், உடுமலை அமராவதி நகரில், பாதுகாப்பு அமைச்சகத்தின், சைனிக் பள்ளி செயல்படுகிறது. இதில், நுழைவுத்தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. இதன்படி, 2019 - 20ம் கல்வியாண்டுக்கு, ஆறு மற்றும், ஒன்பதாம் வகுப்புகளில், மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இதற்கான அகில இந்திய நுழைவுத்தேர்வு, 2019, ஜன., 6ல் நடக்கும். ஒன்பதாம் வகுப்புக்கு, ஆங்கில வழியிலும், ஆறாம் வகுப்புக்கு, ஆங்கிலம், தமிழ் மற்றும் ஹிந்தி மொழியிலும் தேர்வு எழுதலாம். மேலும், ஆறாம் வகுப்பு தேர்வை தமிழில் எழுத, அமராவதி நகர் தேர்வு மையத்தை மட்டும் தேர்வு செய்ய வேண்டும். விண்ணப்பங்களை, 'ஆன்லைன்' மூலமே சமர்ப்பிக்க வேண்டும். www.sainikschooladmission.in, www.sainikschoolamaravathinagar.edu.in என்ற இணைய தள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.நவ., 26, 2018 வரை நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும், விபரங்களுக்கு, 04252 - 256246 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.