WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, October 29, 2018

வேலை நிறுத்தம் : ஜாக்டோ - ஜியோ ஆலோசனை.

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக, வேலை நிறுத்த போராட்டம் நடத்த, எட்டு பேர் குழுவை, 'ஜாக்டோ - ஜியோ' அறிவித்துள்ளது.அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டு குழுவான, ஜாக்டோ - ஜியோ, நவ., 27 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, கூட்டு குழுவின் உயர்மட்ட குழு கூட்டம், சென்னையில், நேற்று நடந்தது.இதில், ஒருங்கிணைப்பாளர்கள் முத்துசாமி, தியாகராஜன், அன்பரசு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். போராட்டத்தை திட்டமிட்டபடி நடத்த, எட்டு பேர் குழு அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது.அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.ஆறாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி வழங்க வேண்டிய, 21 மாத ஊதிய உயர்வு நிலுவை தொகையை வழங்க வேண்டும் உள்பட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்டம் நடக்க உள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.