ஆதி திராவிடர் நல பள்ளி ஆசிரியர்கள், இடமாறுதலுக்கான கவுன்சிலிங், இன்று துவங்குகிறது.ஆதி திராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல மேல்நிலை, உயர்நிலை, நடுநிலை மற்றும் ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான, இடமாறுதல் கவுன்சிலிங், இன்று நடக்க உள்ளது. முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், கம்ப்யூட்டர் ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர், உடற்கல்வி ஆசிரியர்களுக்கும் இன்று கவுன்சிலிங் நடக்கிறது.பட்டதாரி ஆசிரியர், தமிழாசிரியர், இடைநிலை ஆசிரியர்கள், மாவட்டத் திற்குள்ளும், மாவட்டம் விட்டு மாவட்டம் மாறவும், நாளை கவுன்சிலிங் நடக்கும். இந்த பொது மாறுதல் கவுன்சிலிங், அந்தந்த மாவட்ட, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில், காலை, 10:00 மணிக்கு நடக்கும். ஆன்லைனில் மாறுதல் கோரி பதிவு செய்தோர் மட்டும், கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.