WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, October 6, 2018

'சிண்டிகேட் தேர்தலில் முரண்பட்ட முடிவு' : பேராசிரியர்கள் எதிர்ப்பு.

மதுரை காமராஜ் பல்கலை துணைவேந்தர் தேடல் குழுவில் இடம் பெற நடந்த, செனட் மற்றும் சிண்டிகேட் பிரதிநிதி தேர்தல்களில் நிலவிய ஒரே சூழலுக்கு, இருவேறு முரண்பட்ட முடிவுகளை, பதிவாளர் சின்னையா எடுத்துள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.இப்பல்கலை, புதிய தேடல் குழுவில் செனட் பிரதிநிதியாக இடம் பெற, ஜூலை 13ல் அண்ணா பல்கலை துணைவேந்தர் அனந்தகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டார்.அவரை எதிர்த்து போட்டியிட்ட, வேட்பாளர்களின் மனுக்கள் பரிசீலனையின் போது ஏற்கப்பட்டன.ஆனால், இறுதி முடிவில், திருச்சி பாரதிதாசன் பல்கலை பேராசிரியர்,அருள்செல்லகுமார், 'திருவனந்தபுரம் சென்டர் பார் டெவலப்மென்ட் ஸ்டடீஸ்' பேராசிரியர் இருதயராஜனின் மனுக்களை தகுதியை அடிப்படையாக கொண்டு நிராகரிக்கப்படுவதாக பதிவாளர் அறிவித்தார்.சிண்டிகேட் பிரதிநிதிக்கான தேர்தலில், முன்னாள் துணைவேந்தர்கள், மீனா, மார்க்கண்டன் ஆகியோரின் மனுக்கள் மீதான, இறுதி முடிவின் போது, இதே சூழல் நிலவியது.மார்க்கண்டனின் குற்றப் பின்னணி, அவரை நிர்வாகம், நிதி சார்ந்த குழுக்களில் சேர்க்க பரிசீலிக்க கூடாது என்ற, யு.ஜி.சி., விஜிலன்ஸ் பிரிவு உத்தரவு, வழிமொழிந்த சிண்டிகேட், உறுப்பினர் பாரி பரமேஸ்வரன் அதை வாபஸ் பெற்றதற்கான கடிதம் ஆகியவை அளிக்கப்பட்டன.ஆனால், 'பல்கலை விதிப்படி தகுதி அடிப்படையில் மார்க்கண்டன் மனு ஏற்கப்பட்டது' என, பதிவாளர் அறிவித்தார்.மதுரை காமராஜ் பல்கலை பேராசிரியர் நலச்சங்க தலைவர், கலைச்செல்வன் கூறியதாவது:இரண்டு தேர்தலுக்கும் பல்கலை விதி ஒன்று தான். செனட்டில் ஒரு விதியை சுட்டிக்காட்டி, மனுவை நிராகரிக்கிறார். அதே விதியை சிண்டிகேட்டில் சுட்டிக்காட்டி, மனுவை ஏற்கிறார்.மார்க்கண்டனின் வழிமொழிதல் வாபஸ் பெறப்பட்ட பிறகும், மனு ஏற்கப்பட்டது. இப்பல்கலைக்கு தகுதியான துணைவேந்தரை, தேர்வு செய்ய கவர்னர் முயற்சி எடுக்கிறார். ஆனால், அதை தள்ளிப்போட சிலர் சதி செய்கின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.பதிவாளர் முடிவின் பின்னணிபேராசிரியர்கள் கூறியதாவது:'மாஜி' துணைவேந்தர் செல்லத்துரைக்கு, பிஎச்.டி., வழிகாட்டியாக இருந்தவர் சின்னையா. செல்லத்தரை துணைவேந்தராக வந்தவுடன், சின்னையாவிற்கு பதிவாளர் பதவி கிடைக்க உதவினார். செல்லத்துரைக்கு பதவி போனதும், அவருக்கு தொடர்ந்து பல உதவிகளை சின்னையா செய்து வருகிறார்.சிண்டிகேட் பிரதிநிதி தேர்தலில், மார்க்கண்டன் வெற்றி பெற்றால், துணைவேந்தர் பதவிக்கு மீண்டும் விண்ணப்பிக்க செல்லத்துரை திட்டமிட்டுள்ளார்.இதற்கான முயற்சி தான், குற்றப் பின்னணி ஆவணங்கள் இருந்தும் மார்க்கண்டனின் மனுவை பதிவாளர் ஏற்றார். இறுதிக்கட்ட விண்ணப்ப பரிசீலனை முடிவுக்கு வர, மூன்று மணிநேரம் ஆனது. அந்த நேரத்தில் பதிவாளரை சிலர் வெளியில் இருந்து, அலைபேசி மூலமாக இயக்கினர். இதுகுறித்து விசாரிக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.