பி.ஆர்க்., படிப்புக்கு, அடுத்த கல்வியாண்டு முதல், இருமுறை, 'நேட்டா' நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது.அகில இந்திய கட்டடக்கலை கவுன்சில் தலைவர் விஜய்கார்க், நிருபர்களிடம் கூறியதாவது:ஐந்தாண்டு, பி.ஆர்க்., படிப்புக்கு, நேட்டா என்ற 'நேஷனல் ஆப்டிடியூட் டெஸ்ட் பார் ஆர்கிடெக்சர்' நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். ஆண்டுதோறும் ஒருமுறை நடத்தப்பட்டு வந்த நுழைவு தேர்வு, 2019 - 20ம் கல்வியாண்டு முதல், இருமுறை நடத்தப்படுகிறது.பிளஸ் 2 வகுப்பில், இயற்பியல், வேதியியல், கணிதப் பாடங்களில், குறைந்தபட்சமாக தலா, 50 சதவீத மதிப்பெண் பெற்றவர்கள், இத்தேர்வுக்கு தகுதியானவர்கள். 'ஆப்டிடியூட்' மற்றும், 'டிராயிங்' தேர்வு என, மொத்தம் மூன்று மணி நேரம் நடத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.