அண்ணா மற்றும் சென்னை பல்கலைகள், தொலைநிலை கல்வியில், மேலும் சில படிப்புகளை நடத்துவதற்கு, பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி., அனுமதி வழங்கிஉள்ளது.
தொலைநிலை கல்வி முறையில், சென்னை பல்கலையில், மூன்று படிப்பு களுக்கும், அண்ணா பல்கலையில், ஒரு படிப்புக்கும், யு.ஜி.சி., ஏற்கனவே அனுமதி அளித்திருந்தது. இந்நிலையில், இந்த இரண்டு பல்கலைகளில், மேலும் சிலபடிப்புகளுக்கு, யு.ஜி.சி., அனுமதி அளித்துள்ளது. அதன்படி, சென்னை பல்கலைக்கு, இளநிலை மற்றும் முதுநிலையில் மொத்தம், 35 படிப்புகளை நடத்த, யு.ஜி.சி., அனுமதி அளித்துள்ளது. இதற்கான மாணவர் சேர்க்கை, வரும், 20 வரை நடக்கும் என்றும், www.ideunom.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, அண்ணா பல்கலைக்கு, ஏற்கனவே, எம்.எஸ்சி., படிப்புக்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், கூடுதலாக, எம்.பி.ஏ., மற்றும் எம்.சி.ஏ., படிப்புக்கும், யு.ஜி.சி., அனுமதி வழங்கியுள்ளது. தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில், ஏற்கனவே, 38 படிப்புகளுக்கு அனுமதி அளித்த நிலையில், கூடுதலாக, 44 படிப்புகள் நடத்த, அனுமதி தரப்பட்டுள்ளது.தஞ்சை தமிழ் பல்கலை யில், 15 படிப்புகளை, தொலைநிலையில் நடத்துவதற்கும், எஸ்.ஆர்.எம்., நிகர்நிலை பல்கலையில், ஐந்து படிப்புகளை தொலைநிலையில் நடத்துவதற்கும், யு.ஜி.சி., அனுமதி அளித்துள்ளது. இதற்கான பட்டியலை, www.ugc.ac.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.