WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, October 30, 2018

BREAKING NEWS:--->தீபாவளிக்கு முதல் நாள்கல்வி நிறுவனங்கள் உட்பட அனைத்து நிறுவனங்களுக்கும் அரசு விடுமுறை.



தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாளான நவம்பர் 5ஆம் தேதி தமிழகத்தில் அரசு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 6ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. அன்றைய தினம் செவ்வாய் கிழமை. இதனால் சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு சென்று தீபாவளியை கொண்டாடுபவர்கள் திங்கட் கிழமை விடுப்பு பெற்றுக்கொண்டு வெள்ளி இரவு பேருந்து அல்லது ரயில் மூலம் ஊருக்கு சென்று தீபாவளியை நான்கு நாட்கள் கொண்டாட திட்டமிட்டுள்ளனர். ஆனால் திங்கட் கிழமை விடுப்பு இல்லாதவர்கள் தீபாவளியை செவ்வாய் கிழமை அன்று மட்டும் கொண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தீபாவளி பண்டிகை தமிழக மக்கள் கொண்டாடுவதற்கு ஏதுவாக திங்கட் கிழமையான நவம்பர் 5ஆம் தேதியை அரசு விடுமுறை தினமாக தமிழக அரசு அறிவித்துள்ளது. பல்வேறு தரப்பிலிருந்து வந்த கோரிக்கைகளை பரிசீலித்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் 5ஆம் தேதி விடுமுறைக்கு பதிலாக நவம்பர் 10ஆம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே நவம்பர் 5ஆம் தேதி கல்வி நிறுவனங்கள் உட்பட அனைத்து நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.