அண்ணாமலை பல்கலை கழகத்தில் ஏராளமானோர் போலி மதிப்பெண்கள் கொடுத்து பணியில் சேர்ந்துள்ளனர்.இவர்களை பணிநிரவல் என்ற பெயரில் வேறு கல்லூரிக்கு அனுப்பினால் உண்மைதன்மை வெளிப்பட நேரிடும் . எனவே போலி மதிப்பெண் பட்டியல் கொடுத்து பணியில் சேர்ந்துள்ளவர்களை அண்ணாமலை பல்கலை கழகம் அங்கேயே ரகசியமாக பணிபுரிய அனுமதித்துள்ளது. பல்கலை கழகத்தில் பணிபுரிந்து வரும் உதவி பேராசிரியர்கள் & ஆசிரியர்கள் அல்லா பணியாளர்களின் மதிப்பெண் பட்டியலை உண்மைதன்மை சோதனைக்கு உட்படுத்த தமிழக ஆளுநர் உத்தரவிட வேண்டும் என தமிழக கல்வியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதனால் அங்குள்ள பணியாளர்களும் தற்போது கலக்கம் அடைந்துள்ளனர். பல்கலை கழகம் இதனை மறைக்க பெரிய அளவில் தொகையினை முக்கிய அதிகாரிகளுக்கு கைமாற்றியுள்ளதாகவும் இதனால் தான் போலி மதிப்பெண் பட்டியல் மோசடி வெளி உலகத்திற்கு தெரியாமல் இருக்கிறது என தகவல் கசிந்துள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.