கணினி ஆசிரியர் பணிக்கான தேர்வில், 'காப்பி' அடித்த விவகாரத்தில், நாளை மூன்று மையங்களில், மறு தேர்வு நடத்தப்படுகிறது. ஆனால், தேர்வை முழுவதுமாக ரத்து செய்யக்கோரி, இன்று போராட்டம் நடத்தப்பட உள்ளது.அரசு பள்ளிகளில், முதுநிலை கணினி ஆசிரியர்களை நியமிப்பதற்காக, போட்டி தேர்வை, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., 23ல் நடத்தியது. கணினி வழியில் நடத்தப்பட்ட, இந்த தேர்வில் பல்வேறு குளறுபடிகள் நிகழ்ந்தன.தேர்வு மையங்களுக்குள், மொபைல் போனை எடுத்து சென்று, விடைகளை பார்த்து எழுதியதாக, 'வாட்ஸ் ஆப்' செயலியில், வீடியோக்கள் வலம் வருகின்றன. கூட்டமாக அமர்ந்து விவாதித்து, பதில் எழுதியது; தேர்வை எழுதி முடித்து, வெளியே வந்தவர், அடுத்த பிரிவில் காத்திருப்பவருக்கு, வினாக்களை கூறியது என, பல குளறுபடிகள் நடந்தன.கணினி, 'சர்வர்' கோளாறால், அரை மணி நேரத்துக்கு, ஒரு முறை ஓய்வு கொடுத்து, தேர்வு எழுத, நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கும் மேலாக அவகாசம் அளிக்கப்பட்டது. எனவே, இந்த தேர்வை ரத்து செய்ய வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. இதற்காக, இன்று, டி.ஆர்.பி., அலுவலகத்தை முற்றுகையிட்டு, போராட்டம் நடத்த போவதாக அறிவித்துள்ளனர்.இந்நிலையில், குளறுபடிகள் நடந்ததாக கூறி, மூன்று தேர்வு மையங்களில், நாளை மறுதேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. கும்பகோணம், அன்னை இன்ஜி., கல்லுாரி, திருச்சி, கொங்குநாடு இன்ஜி., கல்லுாரி மற்றும் திருச்செங்கோடு, கே.எஸ்.ஆர்.கல்லுாரி ஆகிய மையங்களில், மறு தேர்வு நடத்தப்படுகிறது.இதில், 1,221 பேர் பங்கேற்க உள்ளனர். இந்த தேர்வுக்கு, காலை, 8:30 மணிக்கே, தேர்வு மையத்துக்கு வந்து விட வேண்டும் என, தேர்வு வாரியம் அறிவித்துஉள்ளது.
Wednesday, June 26, 2019
கணினி ஆசிரியர் பணி.

Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.