WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, June 26, 2019

பழைய ஓய்வூதியம் அமல் பொறியாளர்கள் கோரிக்கை.

'தமிழக அரசு, 2004க்கு பின், பணியில் சேர்ந்த அனைவருக்கும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்' என, இந்திய பொறியாளர் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.சென்னை, ராயப்பேட்டையில் உள்ள, இந்தியர் அலுவலர் சங்கத்தில், இம்மாதம், 23ம் தேதி, இந்திய பொறியாளர் கூட்டமைப்பின், தென் மண்டல கூட்டம் நடந்தது. அதில், தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களின், பொறியாளர் சங்கங்களின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.தென் மண்டல தலைவர், என்.வெங்கடேஸ்வரலு தலைமையில் நடந்த கூட்டத்தில், இந்திய பொறியாளர் கூட்டமைப்பின் தலைவர், சி.தேவநாத், துணை தலைவர், எஸ்.ஆனந்த், தென் மண்டல பொதுச்செயலர், கே.அன்பு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.கூட்டத்தில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல், ஓய்வுபெறும் பொறியாளர்களுக்கு பணி நீட்டிப்பு மற்றும் மறு நியமனம் அளிக்க கூடாது என்று, மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துவது உள்ளிட்ட, பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.