
பருவத் தேர்வுக்காக மாணவர்களின் விவரங்களை மே 22-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் இயங்கும் பொறியியல் கல்லூரிகள் பருவத் தேர்வுக்காக தங்கள் நிறுவனத்தில் பயிலும் மாணவர்களின் விவரங்களை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆண்டுதோறும் சமர்ப்பிக்க வேண்டும். அதன்படி, 2020-ஆம் கல்வியாண்டில் ஏப்ரல்}மே மாதங்களில் நடங்கும் பருவத் தேர்வுக்காக மாணவர்களின் விவரங்களை மார்ச் 22-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கவேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவுறுத்திருந்தது.
இதற்கிடையே, கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைக்காக மார்ச் 16-ஆம் தேதி முதலே கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால், மாணவர்களின் விவரங்களை கல்லூரிகளால் உரிய தேதிக்குள் சமர்ப்பிக்க முடியவில்லை.
இந்நிலையில், கல்லூரிகளை மீண்டும் திறந்து தேர்வுகளை நடத்த தமிழக உயர்கல்வித்துறை திட்டமிட்டு வருகிறது. அதன்படி, மாணவர்களின் விவரங்களைச் சமர்ப்பிக்காத கல்லூரிகள் மே 22-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழகம் இணைப்பு கல்லூரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.