WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, May 1, 2020

'ஆன்லைன்' வகுப்புகள் நடத்த 'சாப்ட்வேர்' தயாரிக்குது அரசு.



கல்லுாரிகள், ஆன்லைனில் வகுப்புகளை நடத்துவதற்கு, தமிழக அரசின் சார்பில், புதிய சாப்ட்வேர் தயாரிக்கும் பணி துவங்கிஉள்ளது.

விடுமுறையில் உள்ள கல்லுாரி மாணவர்களுக்கு, ஆன்லைனில் வகுப்புகளை நடத்த, பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி., உத்தரவிட்டுள்ளது. ஜூலையில் தேர்வுகளை நடத்தும் வகையில், பாக்கி உள்ள பாடங்களை முடிக்க, பேராசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்தப் பாடங்களை, 'கூகுள் கிளாஸ் ரூம், ஸ்கைப்' உள்ளிட்டவற்றின் வழியாக நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், தனியார் செயலிகளை பயன்படுத்துவதில், பல்வேறு பாதுகாப்பு பிரச்னைகள் உள்ளதால்,தமிழக அரசின் சார்பில்,தனி சாப்ட்வேர் தயாரிக்கும் பணி துவங்கிஉள்ளது. தமிழ்நாடு அம்பேத்கர் சட்ட பல்கலை சார்பில், சட்டத்துறை அறிவுறுத்தலில், 'எல்காட்' என்ற, தமிழக மின்னணு கழகம், இந்த பணிகளை துவங்கிஉள்ளது.விரைவில் சாப்ட்வேர் தயாரிக்கப் பட்டு, அதன் வழியாக மட்டுமே, ஆன்லைன் பாடங்கள் நடத்தப்படும் என, சட்டப் பல்கலை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.