WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, May 17, 2020

பணிக்கு திரும்பும் ஆசிரியர்களுக்கு பரிசோதனை.

வெளியூர்களில் உள்ள ஆசிரியர்கள், வரும், 21ம் தேதிக்குள் பணியிடங்களுக்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அடுத்த மாதம், 1ம் தேதி, 10ம் வகுப்புக்கு தேர்வு துவங்குகிறது. பிளஸ் 1ல் ரத்தான பாடத் தேர்வும், பிளஸ் 2ல் சில பாடங்களை எழுத தவறியவர்களுக்கும், மீண்டும் தேர்வு நடக்க உள்ளது. மேலும், நடந்து முடிந்த தேர்வு விடைத்தாள்களைதிருத்தும் பணியும், வரும், 27ம் தேதி துவங்க உள்ளது. இதற்காக, வெளியூர்களில் உள்ள ஆசிரியர்கள், தாங்கள் பணியாற்றும் இடங்களுக்கு வர, பள்ளி கல்வித் துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.


வரும், 21ம் தேதிக்குள், அவரவர் பள்ளிகளுக்குவர வேண்டும்.பணிக்கு வருவோரில், தொற்று அறிகுறி இருந்தால், அவர்களுக்கு உடனடியாக மருத்துவ சோதனை செய்ய, பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.