
அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும், தமிழக பள்ளி கல்வி முதன்மை செயலர், தீரஜ்குமார் அனுப்பியுள்ள கடிதம்: தமிழகம் முழுதும், கொரோனா வைரஸ் ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், பல இடங்களில் மருத்துவம் சாரா பணிகளில், ஆசிரியர்கள் பலர் ஈடுபடுகின்றனர்.
கொரோனா ஒழிப்பில், தன்னார்வலர்களாக பங்கேற்க, ஆசிரியர் சங்கங்கள் விருப்பம் தெரிவித்து, கடிதம் அனுப்பியுள்ளன. எனவே, மாவட்ட கலெக்டர்கள், தங்கள் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் வழியாக, தன்னார்வமிக்க ஆசிரியர்களின் பட்டியலை பெற்றுக் கொள்ளலாம். அவர்களில், 50 வயதுக்கு குறைவானவர்களை, கொரோனா ஒழிப்பு பணிகளில் ஈடுபடுத்தலாம்.
பொது இடங்களில் மக்களை நெறிப்படுத்துதல், கொரோனா தொடர்பான அரசின் கணக்கெடுப்பு நடத்துதல், கடை வீதிகளில், தனி மனித விலகலை கடைப்பிடிப்பதை கண்காணித்து உறுதி செய்தல், ரேஷன் கடைகளில் மக்களை ஒழுங்குபடுத்துதல் போன்ற பணிகளுக்கு, அவர்களை பயன்படுத்தி கொள்ளலாம். இவ்வாறு, கடிதத்தில் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.