கொரோனா தொற்று சூழ்நிலையில் ஆசிரியர், அரசு ஊழியர்கள் மீது மாநில அரசு
மும்முனை தாக்குதலை தொடுத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஆசிரியர்கள் தன்னார்வலர்களாக பணிபுரிகின்றனர். ஒருநாள் சம்பளத்தை நிவாரணமாக
வழங்கினர். ஒரே நேரத்தில் அகவிலைப்படி நிறுத்தம், ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு ரத்து, வருங்கால வைப்பு நிதி வட்டி குறைப்பு ஆகிய நடவடிக்கைகளால் மனரீதியான பாதிப்பை அரசு ஏற்படுத்தியுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.
அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர் அலுவலர் சங்க மாநில பொருளாளர் இளங்கோ
கூறியதாவது: அகவிலைப்படி என்பது மத்திய, மாநில அரசுகளின் விலை உயர்வு குறியீடுகள் அடிப்படையில் வழங்கும் நிவாரணம் ஆகும். அதை நிறுத்துவது பொருளதார பாதிப்பு
ஏற்படுத்தும். மத்திய அரசே அறிவிக்காத போது ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பினையும்
தடை செய்ததுஅரசின் வெறுப்பை காட்டுகிறது.
வருங்கால வைப்பு நிதி வட்டி சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதன் மூலம் மும்முனை தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளது. இந்நடவடிக்கைகளை அரசு கைவிட வேண்டும், என்றார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.