WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, November 9, 2020

பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு பாடத்திட்டம் குறைப்பு

தமிழகத்தில் கரோனா பரவல் காரணமாக நிகழ் கல்வியாண்டுக்கான வகுப்புகளைத் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளன.

இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: கல்வியாண்டு தாமதத்தை ஈடுசெய்ய ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை 40 சதவீதம் பாடஅளவு குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல் மேல்நிலை வகுப்புகளான பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டங்களில் சிறிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதன்படி மொத்தமுள்ள பாடங்கள் முதன்மை மற்றும் விருப்பமுள்ளவை என 2 பகுதியாக பிரிக்கப்பட்டுள்ளன. முதன்மை பகுதியில் 70 சதவீத பாடங்கள் இருக்கும். இந்தப் பாடங்கள் ஆசிரியா்கள் மூலம் மாணவா்களுக்கு நடத்தப்படும். விருப்பமுள்ள பகுதியில் 30 சதவீத பாடங்கள் இருக்கும். அதை மாணவா்கள் சுயமாகப் படித்துக் கொள்ள வேண்டும்.

மேலும், குறைக்கப்பட்ட பாடத்திட்ட விவரங்கள் ஓரிரு நாள்களில் முதல்வா் மூலம் வெளியிடப்படவுள்ளன என அவா்கள் தெரிவித்தனா்.







No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.