இது குறித்து, தேர்வுத்துறை இயக்குனர் உஷாராணி வெளியிட்ட செய்திக்குறிப்பு:நடப்பு கல்வி ஆண்டில், அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் படிக்கும், 10ம் வகுப்பு மாணவர்கள், டிசம்பர், 27ல் நடக்கவுள்ள தேசிய திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பங்களை, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், இன்று முதல், 30ம் தேதி வரை பதிவிறக்கம் செய்யலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வு கட்டணமாக, 50 ரூபாய் சேர்த்து, தங்கள் பள்ளி தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும்.வரும், 30ம் தேதிக்குள், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்; அவகாசம் நீட்டிக்கப்படாது. தேர்வர்கள், பள்ளிக்கு செல்லும் போது, முக கவசம் அணிந்து செல்ல வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.