WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, November 23, 2020

வரும் 26ல் போராட்டத்தில் ஈடுபட ஊழியர்களுக்கு தடை.

 


மத்திய அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க, தமிழக அரசு ஊழியர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க எதிர்ப்பு, காலி பணியிடங்களை நிரப்புதல், வேலைவாய்ப்பு அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, மத்திய அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு, வரும், 26ல் போராட்டம் அறிவித்துள்ளது.




இந்த போராட்டத்தில், தமிழக அரசு ஊழியர்கள் பங்கேற்பதை தடுக்க, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி, 26ம் தேதி போராட்டத்தில் பங்கேற்கும் ஊழியர்களுக்கு, சம்பள பிடித்தம் செய்யப்படவுள்ளது.தற்காலிக மற்றும் பகுதி நேர ஊழியர்கள் போராட்டத்தில் பங்கேற்றால், வேலைவாய்ப்புகள் ரத்து செய்யப்படும்.


தலைமைச் செயலக ஊழியர்கள், 26ம் தேதி முழுமையாக பணிக்கு வரவேண்டும் என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தமிழக அரசு ஊழியர்கள் அனைவரும், 26ம் தேதி பணிக்கு வருவதை உறுதி செய்ய வேண்டும் என, அனைத்து துறைகளுக்கும், தலைமைச் செயலர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.