WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, November 27, 2020

ஆசியாவின் சிறந்த கல்வி நிறுவனங்கள்: டாப்-50.

கியூ.எஸ். நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச அளவில் சிறந்த கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியல் மற்றும் ஆசியாவின் சிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியலை வெளியிடுகிறது. அவ்வகையில், 2020ம் ஆண்டிற்கான ஆசியாவின் சிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது.
இந்த பட்டியலில் முதல் 50 இடங்களில் மும்பை ஐஐடி, டெல்லி ஐஐடி மற்றும் சென்னை ஐஐடி ஆகிய உயர்கல்வி நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. 37வது இடத்தை மும்பை ஐஐடியும், 47வது இடத்தை டெல்லி ஐஐடியும், 50வது இடத்தை சென்னை ஐஐடியும் பெற்றுள்ளன. இந்த மூன்று நிறுவனங்களும் இரண்டாவது ஆண்டாக டாப்-50 இடத்தை தக்க வைத்துள்ளன. 


கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் முதலிடத்தை பிடித்துள்ளது. 


பெங்களூரு தேசிய அறிவியல் மையம் 56வது இடத்தையும், ஐஐடி காரக்பூர் 58வது இடத்தையும் பிடித்தது. இதேபோல் டெல்லி பல்கலைக்கழகம் (71), ஐஐடி கான்பூர் (72), ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் (81) ஆகிய கல்வி நிறுவனங்களும் டாப்-100 பட்டியலில் இடம்பெற்றுள்ளன. 


இது தொடர்பான செய்தியை மத்திய கல்வி மந்திரி ரமேஷ் பொக்ரியால் தனது டுவிட்டரில் பதிவிட்டு, வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். நமது பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் கல்வித்துறை சிறப்பாக செயல்படுவதற்கு இது ஒரு சான்றாகும் என்றும் அவர் கூறி உள்ளார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.