WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, November 18, 2020

துணைத்தேர்வில் தேறியோரை பள்ளிகளில் சேர்க்க உத்தரவு.

'பத்தாம் வகுப்பு துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை 11ம் வகுப்பில் சேர்த்து கொள்ள வேண்டும்' என தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலகத்தில் இருந்து அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு துணைத்தேர்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டு உள்ளன. துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் 11ம் வகுப்பு சேர்க்கைக்கு வரும் போது சில தலைமை ஆசிரியர்கள் மாணவர் சேர்க்கை செப். 30ல் முடிந்து விட்டது என தெரிவித்துள்ளனர்.

இக்கல்வியாண்டில் சிறப்பு நிகழ்வாக 10ம் வகுப்பு துணைத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் சேர்க்கைக்கு வரும்போது அவர்களை பள்ளியில் சேர்க்கும்படி அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் அறிவுறுத்த வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.