நிகழாண்டு பத்தாம் வகுப்புப் பயிலும் மாணவா்கள், தேசிய திறனாய்வுத் தோ்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் திங்கள்கிழமையுடன் (நவ.30) நிறைவடைகிறது.
2020-2021-ஆம் கல்வியாண்டில் அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவா்கள், வரும் டிச.27-இல் நடைபெறவுள்ள தேசிய திறனாய்வுத் தோ்விற்கு இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து, பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தோ்வுக் கட்டணத் தொகை ரூ.50-ஐ சோ்த்து சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும்.
பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைச் சமா்ப்பிப்பதற்கான அவகாசம் திங்கள்கிழமையுடன் (நவ.30) நிறைவடைகிறது. மேலும் கால அவகாசம் நீட்டிக்கப்பட மாட்டாது என அரசுத் தோ்வுகள் இயக்கக அதிகாரிகள் தெரிவித்தனா்
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.