கல்வித்துறையில் பல மாதங்களாக காலியாக உள்ள 21 மாவட்ட கல்வி அலுவலர்கள் (டி.இ.ஓ.) பணியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டும் என தலைமையாசிரியர்கள் வலியுறுத்தினர்.1.1.2020ல் டி.இ.ஓ. பதவி உயர்வுக்கு தகுதியுள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளை சேர்ந்த 100 தலைமையாசிரியர்களின் சீனியாரிட்டி பட்டியல் தயாரிக்கப்பட்டது. ஆனால் கொரோனாவை காரணம் காட்டி பதவி உயர்வு வழங்குவது இழுத்தடிக்கப்படுகிறது. பட்டியலில் உள்ள பலர் பதவி உயர்வு கிடைக்காமலேயே பணி நிறைவு பெறும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.
தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர்கள் சங்கம் மாநில தலைவர் பீட்டர்ராஜா கூறியதாவது:கொரோனாவால் மாணவர்கள் மட்டும் தான் பள்ளிக்கு வரவில்லை. அவர்களுக்கு வழங்க வேண்டிய அனைத்து நலத்திட்டங்கள் ஆசிரியர்கள் அலுவலர்கள் வருகை உள்ளிட்ட பணிகள் பள்ளிகளில் வழக்கமாக நடக்கின்றன. பதவி உயர்வு மூலம் டி.இ.ஓ.க்கள் காலி பணியிடங்களை கல்வித்துறை விரைவில் நிரப்ப வேண்டும். அமைச்சர் செங்கோட்டையனிடமும் நேரில் வலியுறுத்தியுள்ளோம் என்றார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.