WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, November 30, 2020

பாடத்திட்டம் குறைப்பு விபரம் மந்திரி பேட்டி.

''பாடத்திட்டம் குறைப்பு குறித்த விபரங்கள், முதல்வரிடம் நாளை வழங்கப்பட்டு, பின் அரசாணை வெளியிடப்படும்,'' என, பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
ஈரோடு மாவட்டம், குருமந்துாரில் அமைச்சர் கூறியதாவது:கொரோனா தொற்று சூழலால், பாடத்திட்டம் குறைப்பு குறித்த விபரங்கள், முதல்வரிடம் நாளை வழங்கப்படும். பின், பாடத் திட்டம் குறித்து அரசாணை வெளியிடப்படும். அதற்கேற்ப, கல்வி சேனல் மற்றும் ஆன்லைனில், மாணவர்களுக்கு பாடங்கள் போதிக்கப்படும். புதிய கல்வி கொள்கை குறித்து நிபுணர் குழு, பெற்றோர், ஆசிரியர் மற்றும் கல்வியாளர்களிடம் கருத்து கேட்டு வருகிறது. மத்திய அரசு, 2023 முதல், புதிய கல்வி கொள்கையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுஉள்ளது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.