WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, December 24, 2020

தமிழகத்தில் ஜனவரி 18 முதல் பள்ளிகள் திறக்கப்படும் – பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை!!

கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் அது குறித்து தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் பள்ளிகள் அடுத்த ஆண்டு ஜனவரி 18 முதல் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பள்ளிகள் திறப்பு:

கொரோனா அச்சம் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டன. கடந்த ஆண்டு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்த நிலையில் இந்த கல்வியாண்டு தொடங்கி 6 மாத காலம் முடிவடைந்து விட்டது. நவம்பர் மாதம் ஊரடங்கு தளர்வுகளில் தனியார் பயிற்சி மையங்கள், பாலிடெக்குகள் திறக்கப்பட்டன.
பிறகு டிசம்பர் மாதம் ஊரடங்கு அறிவித்த தமிழக அரசு அடுத்தகட்டமாக டிசம்பர் 2-ஆம் தேதி முதல் கல்லுாரிகளில் முதுநிலை இறுதியாண்டு மாணவர்களுக்கும், டிசம்பர் 7 முதல் இளநிலை, முதுநிலை உள்ளிட்ட அனைத்து இறுதியாண்டு மாணவர்களுக்கும், நேரடி வகுப்புகள் துவங்கலாம் 

அதன்பின் பள்ளிகள் திறப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் ஐஐடி மற்றும் அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு கொரோனா தொற்று அதிகரித்து வரும் காரணத்தால் மீண்டும் பள்ளிகள் திறப்பு தள்ளிவைக்கப்பட்டது. தற்போது எப்போது பள்ளிகள் திறக்கலாம் என கல்வித்துறை குழு சார்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. அதன்படி இந்த மாதம் கிறிஸ்துமஸ், புத்தாண்டு என அடுத்தடுத்து பண்டிகைகள் இருப்பதால் ஜனவரி 18 முதல் மேல்நிலை வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கலாம் என அரசு தரப்பில் ஆலோசனை வழங்கப்பட்டது.

தமிழகத்தின் அண்டை மாநிலங்களான புதுச்சேரி மற்றும் கர்நாடகா அரசுகள் ஜனவரி மாதம் பள்ளிகள் திறப்பது குறித்த அறிவிப்பு வெளியிட்ட காரணத்தால் தமிழகத்தில் மட்டும் பள்ளி, கல்லூரி மாணாக்கர்களின் எதிர்காலத்தை பற்றி அரசு சிந்திக்காமல், மாநில அரசும், எதிர்க்கட்சிகளும், தமிழக சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு, மாறுப்பட்ட கருத்துக்களை கூறி, சர்ச்சைகளை ஏற்படுத்தி, கல்வி நிறுவனங்கள் திறப்பது தவிர்க்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக, விரைவில், கல்வி அமைச்சர் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் விவாதித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.