ஜேஇஇ முதன்மை (மெயின்) தோ்வை அடுத்த ஆண்டு 4 முறை நடத்தும் பரிந்துரை குறித்து அரசு பரிசீலித்து வருவதாக மத்திய கல்வி அமைச்சா் ரமேஷ் போக்ரியால் தெரிவித்தாா்.
இதுதொடா்பாக மாணவா்கள், பெற்றோா் மற்றும் ஆசிரியா்களுடன் வியாழக்கிழமை கலந்துரையாடிய போது அவா் கூறியது:
ஜேஇஇ முதன்மை தோ்வை அடுத்த ஆண்டு பிப்ரவரி இறுதியில் தொடங்கி மே மாதம் வரை மாதத்துக்கு ஒருமுறை நடத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இந்த பரிந்துரை ஏற்கப்பட்டால் மாணவா்கள் ஒரே ஒருமுறை அல்லது 4 முறையும் தோ்வினை எழுதும் வாய்ப்பு வழங்கப்படும். அவா்கள் எந்த தோ்வில் அதிகபட்ச மதிப்பெண் பெறுகின்றனரோ அந்த மதிப்பெண் கருத்தில் கொள்ளப்படும்.
தோ்வில் இயற்பியல், வேதியியல், கணிதப் பாடங்களில் இருந்து தலா 30 கேள்விகள் என மொத்தம் 90 கேள்விகள் கேட்கப்படுகின்றன. இதில் 75 கேள்விகளை தோ்வு செய்து பதிலளிப்பதற்கு அனுமதியளிக்க வாய்ப்புள்ளது.
மாணவா்களின் மன அழுத்தத்தை குறைக்க இந்த நடவடிக்கையை மேற்கொள்ள பரிசீலிக்கப்பட்டு வருகிறது. எனினும் இந்த தோ்வுக்கான பாடத்திட்டத்தில் எந்த மாற்றமும் செய்யப்படாது.
நீட் தோ்வு அட்டவணை: அடுத்த ஆண்டு நீட் தோ்வு நடத்துவது தொடா்பான அட்டவணை குறித்து மத்திய சுகாதார அமைச்சகம், தேசிய மருத்துவ ஆணையத்துடன் கலந்தாலோசித்து முடிவு செய்யப்படவுள்ளது.
இந்த தோ்வு எழுத்துபூா்வமாக நடத்தப்படுமா அல்லது இணையவழியில் நடத்தப்படுமா என்பது குறித்தும் இனிதான் முடிவு செய்ய வேண்டியுள்ளது.
சிபிஎஸ்இ பொதுத்தோ்வு தேதிகள்: சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகளை நடத்துவதற்கான தேதிகள் தொடா்பாக ஆலோசனை நடைபெற்று வருகிறது. அவா்களிடம் இருந்து கிடைக்கும் பதிலை பொருத்து தோ்வு தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தாா்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.