WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, December 2, 2020

இறுதியாண்டு மாணவர்களை... வரலாம் வா...வரலாம் வா!இன்று வரவேற்க கல்லூரிகள் தயார்!.

 


'கோவிட்-19' காரணமாக கடந்த எட்டு மாதங்களாக, மூடப்பட்டு இருந்த கல்லுாரிகள் இன்று முதல், மீண்டும் திறக்கப்படுகின்றன; முதுகலை இறுதியாண்டு மற்றும் ஆராய்ச்சி மாணவர்களை வரவேற்க, அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, கல்லுாரிகள் தயார் நிலையில் உள்ளன.கொரோனா தொற்று குறைந்து உள்ளதால், ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, இயல்பு நிலை திரும்பி வருகிறது.
கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டிருந்த நிலையில், ஆன்லைனில் வகுப்புகள் நடைபெற்றுவந்தன. இன்று முதற்கட்டமாக பல்கலை, கல்லுாரிகளில் முதுகலை இறுதியாண்டு மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு, வகுப்புகள் துவங்குகின்றன.முதுகலை இன்ஜி., கலை மற்றும் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கும் கல்லுாரிகள் செயல்பட உள்ளன.மாணவர்களின் வருகையை முன்னிட்டு கல்லுாரி, பல்கலை வளாகங்களில் செய்ய வேண்டிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை குறித்து, தமிழக அரசு மற்றும் உயர்கல்வித்துறை, வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
இந்த வழிமுறைகளை பின்பற்றி, மாணவர்களை வரவேற்க கல்லுாரிகள் தயார் நிலையில் உள்ளன.கோவை அரசு கலை கல்லுாரி முதல்வர் சித்ரா கூறியதாவது:எட்டு மாதங்கள் கழித்து, மாணவர்களை வரவேற்க நாங்கள் தயாராக உள்ளோம். இதற்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், கல்லுாரி வளாகத்தில் எடுக்கப்பட்டுள்ளன.வகுப்பறைகள் மற்றும் ஆய்வகங்களில், கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் அரசு அறிவித்துள்ள, வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றிதான், கல்லுாரி வளாகத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள். மாணவர்களுக்கு கொரோனா தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்த, மாநகராட்சி சார்பில் கல்லுாரி வளாகத்தில், ஆங்காங்கே போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
மாணவர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து தான், வர வேண்டும்.முகக்கவசம் அணியாத மாணவர்கள் கல்லுாரிக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். கல்லுாரி நுழைவுவாயிலில் அனைத்து மாணவர்களுக்கும், 'தெர்மோ ஸ்கேனர்' மூலம் உடல் வெப்பநிலை சரிபார்க்கப்படும்.அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை, மாணவர்கள் கட்டாயம் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய, பேராசிரியர்கள் அடங்கிய தனிக்குழு ஒன்று, ஏற்படுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.அரசு கலை கல்லுாரியை போன்று, தனியார் இன்ஜி., கலை மற்றும் அறிவியல், தொழில்நுட்ப கல்லுாரிகள், பல்கலைகளிலும் இதேபோன்று, பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
டிச., 7ம் தேதி முதல் இளநிலை இறுதியாண்டு கலை, அறிவியல், இன்ஜி., வேளாண், தொழில்நுட்ப கல்லுாரிகள், பல்கலை மாணவர்களுக்கும் வகுப்புகள் துவங்க உள்ளன.விடுதிகளும் தயார்!வெளியூர்களில் இருந்து வந்து படிக்கும் மாணவர்களுக்கு, தங்கும் இடம் குறித்து கேள்வி எழுந்தது. இதனை கருத்தில் கொண்டு மாணவர்கள், விடுதியில் தங்க, தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து, கல்லுாரி விடுதிகளிலும் கோவிட்-19 பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டு, இன்று முதல் செயல்பட உள்ளன. நேற்று இரவு முதலே, வெளியூர் மாணவர்கள் கல்லுாரிகளுக்கு உடமைகளுடன் வந்து தங்க துவங்கியுள்ளனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.