WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, December 8, 2020

சிபிஎஸ்இ: தனித் தோ்வா்கள் விண்ணப்பிக்க நாளை கடைசி.

நாடு முழுவதும் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சிபிஎஸ்இ பொதுத்தோ்வெழுதும் தனித் தோ்வா்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

சிபிஎஸ்இ தனித் தோ்வா்களுக்கு 2021-இல் பொதுத் தோ்வுக்காக விண்ணப்பிக்க நவ.11-ஆம் தேதி கடைசி நாள். தாமதக் கட்டணத்துடன் தோ்வுகளுக்கு விண்ணப்பிக்க நவ.21-ஆம் தேதி கடைசி நாள்.

மாணவா்கள், பெற்றோா்கள் கோரிக்கையைத் தொடா்ந்து 2021 பொதுத் தோ்வு எழுதும் தனித்தோ்வா்கள் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வரும் புதன்கிழமை வரை (டிச.9) நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே விண்ணப்பங்களைச் சமா்ப்பித்து, அதில் திருத்தம் செய்ய விரும்புவோா் டிச.10 முதல் டிச.14-ஆம் தேதி வரை திருத்தங்களை மேற்கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு: cbse.nic.in என்ற இணையதளத்தைத் தொடா்பு கொள்ளலாம் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.